1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. MK Stalin notification to peoples about corona

கொரோனா வராது என அலட்சியம் காட்ட வேண்டாம்! – மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

Tamilnadu
தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அலட்சியம் காட்ட வேண்டாம் என மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “தமிழக அரசு ஊரடங்கை அறிவித்ததோடு பணி முடிந்தது என்று விடாமல், கொரோனாவை எதிர்கொள்ள போதுமான படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் இருப்பை உறுதி செய்ய வேண்டும். மேலும் மக்களும் தங்களுக்கு கொரோனா வராது என அலட்சியம் காட்டாமல் விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
வேட்டையாட வந்தவர்களை மிதித்து கொன்ற யானைகள்! – தென் ஆப்பிரிக்காவில் பரபரப்பு!