ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : வியாழன், 19 செப்டம்பர் 2019 (17:54 IST)

பாலியல் புகார் கொடுக்க சொல்லி டார்ச்சர் : மாணவி ஆடியோ வெளியீடு

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி. ஏ உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் மீது பாலியல் புகார் கொடுக்கச் சொல்லி, பேராசிரியர் மற்றும் வார்டன் தனக்கு தொல்லை தருவதால், தற்கொலை செய்யப்போவதாக மாணவி ஒருவர் ஆடியோ வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி, ஏ  உடற்கல்வியியல் கல்லூரியில் ஆண்கள் - பெண்கள் என இருபாலரும் படித்து வருகின்றனர்.இந்த கல்லூரியில் முதல்வராக இருப்பவர் ஜார்ஜ்  வில்லியம்ஸ்.  
 
இந்நிலையில், கல்லூரியில் பணியாற்றும் பேராசிரிய ஜோதி மற்றும்   விடுதி வார்டன் ஷெர்லி ஆகிய இருவரும்  இணைந்து,கல்லூரி முதல்வர் ஜார்ஜ் வில்லியமஸ்க்கு எதிராகவும் பாலியல் கொடுக்கவேண்டுமென   மாணவி ஒருவருக்கு தொந்தரவு தந்துள்ளனர்.
 
இதுதொடர்பாக  அந்த மாணவி தற்கொலை செய்து கொல்லப்போவதாக ஒரு ஆடியோ வெளியிடுள்ளார். அதனால், கல்லூரியில் படித்துவரும் சுமார் 50க்கும்மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
கடந்த சில நாட்களாக, கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் ஜோதி மற்றும்   விடுதி வார்டன் ஷெர்லி ஆகிய இருவரும்  மாணவிக்கு தொல்லை தந்துவருவதால், மன உளைச்சலுக்கு உண்டான மாணவி, ஒரு ஆடியோ வெளியிட்டுள்ளார். இந்நிலையில் பேராசிரியர் ஜோதி மற்றும் வார்டன் ஷெர்லி மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.