செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : வியாழன், 19 செப்டம்பர் 2019 (11:05 IST)

சென்னையில் விடிய விடிய கொட்டிய மழை: நீர் தேங்கியதால் மக்கள் அவதி

சென்னையில் விடிய விடிய கொட்டிய மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது.

சென்னையில் நேற்று இரவு முழுவதும் கனமழை கொட்டியது. விடிய விடிய பெய்த மழையால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பணிக்கு செல்பவர்களும் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் மிகவும் சிரமப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக சென்னை மண்ணடி பகுதியில் பெய்த கனமழையால் சாலைகளில் முட்டியளவு நீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். மேலும் சென்னை ஐஸ் அவுஸ் சாலையில் சில உயரத்திற்கு நீர் தேங்கியுள்ளதால், அடைப்பை நீக்கும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது லேசான தூரல் பெய்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்னை மட்டுமல்லாது திருவள்ளூர் மாவட்டத்திலும் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.