திங்கள், 5 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 7 டிசம்பர் 2018 (08:14 IST)

நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களை பின்னுக்கு தள்ளியது திருப்பூர்

நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களை பின்னுக்கு தள்ளியது திருப்பூர்
ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் உள்ள ஆக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் என்ற அமைப்பு உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்கள் குறித்த கருத்துக்கணிப்பு ஒன்றை எடுத்து வெளியிடும். அந்த வகையில் 2018ஆம் ஆண்டில் மிக வேகமாக வளர்ந்த நகரும் நகரங்களின் பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த பட்டியலில் முதல் பத்து இடங்களையும் இந்திய நகரங்கள் பிடித்துள்ளன என்பதும் அதில் தமிழகத்தில் உள்ள திருப்பூர், திருச்சி மற்றும் சென்னை ஆகிய 3 நகரங்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் சூரத், ஆக்ரா, பெங்களூர், ஐதராபாத் மற்றும் நாக்பூர் ஆகிய நகரங்கள் உள்ளன. 6வது இடத்தில் திருப்பூர், 8வது இடத்தில் திருச்சி மற்றும் 10வது இடத்தில் சென்னை உள்ளது. சென்னையை விட திருப்பூர் மற்றும் திருச்சி ஆகிய நகரங்கள் இந்த ஆண்டு மிக வேகமாக வளர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களை பின்னுக்கு தள்ளியது திருப்பூர்
இந்த பட்டியலில் உலகின் பெரிய நகரங்களான நியூயார்க், லாஸ் ஏஞ்சலஸ், பெய்ஜிங், லண்டன், கலிபோர்னியா ஆகிய நகரங்களை விட திருப்பூர், திருச்சி, சென்னை ஆகிய நகரங்கள் அதிக வளர்ச்சியை பெற்றுள்ளது என்பது ஒரு ஆச்சரியமான விஷயம்