வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 6 டிசம்பர் 2018 (19:16 IST)

புதிதாய் உருவாகும் தாழ்வு நிலை: தமிழகத்திற்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி சீரான இடைவெளியில் மழை பெய்து வருகிறது. தற்போது மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
கிழக்கு நோக்கி வீசும் காற்றின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என அறிவித்திருந்தனர். 
 
இந்நிலையில், இதனை தொடர்ந்து 9 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதோடு, தென் தமிழகத்தில் 48 மணி நேரத்திற்கு மிதமான மழையும் ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்யும் என கூறப்பட்டுள்ளது. 
 
தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய பகுதியான இந்தியப் பெருங்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால், வடகிழக்கு பருவ மழை நீடிக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.