1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (15:50 IST)

தக்காளி விலை படுவீழ்ச்சி: கிலோ ரூ.2 என்பதால் பறிக்காமல் விடும் விவசாயிகள்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தக்காளி மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் விலை கிலோ ரூ.100க்கும் அதிகமாக விற்பனையாகியது. ஆனால் தற்போது இதன் விலை தலைகீழாக உள்ளது.
 
தக்காளி விளைச்சல் அதிகரித்ததன் காரணமாக மார்க்கெட்டுக்கு வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் தக்காளி விலை கடந்த சில நாட்களாக கிடுகிடுவென இறங்கி கடந்த சில நாட்களாக கிலோ ரூ.10 என விற்பனையானது
 
இந்த நிலையில் இன்று தர்மபுரி மார்க்கெட்டில் தக்காளியின் வரத்து மிக அதிகமாக இருந்ததால் கிலோ ரூ2க்கும் ஒரு கூடை தக்காளி ரூ.30க்கும் விற்பனையாகி வருகிறது. பறிப்பு கூலி மற்றும் வண்டி வாடகை கூட தேறாததால் கவலையடைந்த தக்காளி விவசாயிகள் மீதமுள்ள தக்காளியை பறிக்காமல் செடியிலேயே விட்டுவிட்டனர். இதனால் தக்காளி அழுகி, கால்நடைகளுக்கு உணவாகி வருகிறது.