திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 5 அக்டோபர் 2021 (08:08 IST)

நாளை முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: சிசிடிவி கேமிரா பொருத்த அறிவுறுத்தல்!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 ஆகிய இரண்டு நாட்களில் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது என்பது தெரிந்ததே 
 
இதற்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் நாளை வாக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது
 
நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள அனைத்து பகுதிகளிலும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.