திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 4 அக்டோபர் 2021 (12:19 IST)

விஜய் படத்துடன் துண்டு பிரசுரங்கள்.. விஜய் பேட்ஜ்.. விஜய் கொடி! – தேர்தல் பிரச்சாரத்தில் விஜய் ரசிகர்கள்!

தமிழக உள்ளாட்சி தேர்தலில் விஜய் ரசிகர்கள் போட்டியிடும் நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதற்காக பல முக்கிய தமிழக கட்சிகளும் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், முதன்முறையாக விஜய் அனுமதியுடன் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிருகின்றனர்.

இந்நிலையில் பிரச்சாரத்திற்கு கடைசி நாளான இன்று விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிடும் பகுதிகளில் விஜய் மக்கள் இயக்க கொடியோடு விஜய் ரசிகர்கள் வீடு வீடாக சென்று விஜய் படத்துடன் கூடிய துண்டு பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர்.