ராகுல், கார்கேவை விட மாணிக்கம் தாகூர் பெரிய ஆளா? செல்வப்பெருந்தகை தாக்கு
திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிப்பது குறித்து அக்கட்சியின் எம்பி மாணிக்கம் தாகூர் அண்மை காலமாக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகிறார். இதற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "ராகுல் காந்தியை விட மாணிக்கம் தாகூர் பெரிய ஆளா?" என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், ஒரு அறைக்குள் பேசித் தீர்க்க வேண்டிய விஷயங்களை பொதுவெளியில் பேசுவதை ஏற்க முடியாது எனச் சாடியுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வழிகாட்டுதலின்படியே தமிழக காங்கிரஸ் செயல்பட்டு வருவதாகவும், கட்சி தலைமையை விட பெரிய ஆள் இங்கு எவரும் இல்லை என்றும் அவர் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.
மாணிக்கம் தாகூர் மீதான இந்த புகார் குறித்து மேலிடத்துடன் ஆலோசிக்க பெங்களூரு செல்லவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் எம்பி-யே பேசியிருப்பது காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதல் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்துமா என்ற விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
Edited by Siva