1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tomorrow extra tokens says registrar office

நாளை கூடுதல் முன்பதிவு டோக்கன்.. பதிவுத்துறை செயலர் தகவல்

document registrations
நாளை சுபமுகூர்த்த தினம் என்பதால் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என வணிகவரி மற்றும் பதிவு பதிவுத்துறை செயலர் தகவல் தெரிவித்துள்ளார்.  

ஒவ்வொரு சுபமுகூர்த்த தினத்திலும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதும் இதனால் சுபமுகூர்த்த தினத்தில் மட்டும் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலாளர் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘சுப முகூர்த்த தினமான நாளை (நவ.23) சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன் ஒதுக்கீடு செய்யப்படும்,.

வழக்கமாக வழங்கப்படும் 100 டோக்கன்களுக்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என  வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் தகவல் தெரிவித்துள்ளார்.

Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
தலைமையாசிரியர்களுடன் கலந்துரையாடல்- அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்