திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 11 ஜூலை 2023 (07:02 IST)

மகளிர் உரிமை தொகை.. விண்ணப்பம் பெற டோக்கன் வழங்கப்படும்: ராதாகிருஷ்ணன் பேட்டி..!

மகளிர் உரிமைத்தொகை பெற டோக்கன் வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். 
 
தகுதி வாய்ந்த பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செப்டம்பர் 15 முதல் தொடங்க உள்ளது. இதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டன என்பதும் யார் யாருக்கு இந்த பணம் கிடைக்கும் என்பது குறித்து அறிவிப்பு வெளியானது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் மகளிர் உரிமைத் தொகை வழங்குவது குறித்து மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்த போது ’நாள் ஒன்றுக்கு 50 குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும் 500 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு தன்னார்வளர் நியமனம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார் 
 
மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு முன்கூட்டியே டோக்கன் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் தான் விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Siva