கோயம்பேடு சந்தைக்கு வரும் மகாராஷ்டிர தக்காளி
கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த பல நாட்களாகவே மழை தொடர்ந்து வரும் நிலையில் சந்தைகளில் தக்காளி வரத்து குறைந்துள்ளது. தக்காளி வரத்து குறைவாக இருக்கும் நிலையில் தேவை அதிகமாக உள்ளதால் விலை ஏற்றம் கண்டுள்ளது. தக்காளி மட்டுமின்றி வெங்காயம் மற்றும் காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது.
ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டு வரத்து பாதியாக குறைந்ததால் அதன் விலை திடீரென அதிகரித்தது. தக்காளி ஒரு கிலோ ரூ.80 - ரூ.100 ஆக இருந்த நிலையில் இன்று ரூ,120 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இன்றும் மகாராஷ்டிராவில் இருந்து 2 லாரிகளில் 25 டன் தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது. எனவே விலை குறியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.