1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tomoto rate at koyambedu today

சென்னையில் இன்றைய தக்காளி விலை என்ன? பொதுமக்கள் அதிர்ச்சி!

கோயம்பேடு
சென்னையில் மழை காரணமாக தக்காளி வரத்து குறைவாக இருப்பதன் காரணமாக தக்காளி விலை கிலோ ரூபாய் 100 ரூபாய்க்கும் அதிகமாக கடந்த இரண்டு நாட்களாக விற்பனை செய்து வந்தது
 
இந்த நிலையில் சென்னையில் தக்காளி விலை இன்று சற்றே குறைந்து இருப்பதாக கோயம்பேடு அவர்கள் தெரிவித்துள்ளனர். தக்காளி விலை அதிகமாக இருப்பதன் காரணமாக வியாபாரம் மந்தமாக இருந்ததாகவும் இதனால் கோயம்பேடு சந்தையில் இன்று ஒரு கிலோ தக்காளி 80 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின 
 
இன்று கோயம்பேடு சந்தையில் வெங்காயம் 40 ரூபாய் என்றும், உருளை 30 ரூபாய் என்றும் சின்ன வெங்காயம் 40 ரூபாய் என்றும் விற்பனையாகி வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்
 
 
அடுத்த கட்டுரையில்
தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு: நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!