வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth.K
Last Modified: செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (09:41 IST)

பட்ஜெட் விலையில் JioBook லேப்டாப்! குடுக்குற காசுக்கு வொர்த்தா? – சிறப்பம்சங்கள் என்ன?

JioBook
ஜியோ நிறுவனம் தற்போது புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள மிகவும் பட்ஜெட் விலையிலான JioBook பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.



ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பட்ஜெட் விலையில் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட JioBook ஐ தயார் செய்துள்ளது. நேற்று இந்த JioBook அறிமுகப்படுத்தப்பட்டது.

JioBook சிறப்பம்சங்கள்:

JioBook (2023) 11.6-இன்ச் ஆன்டி-க்ளேர் HD டிஸ்ப்ளே கொண்டுள்ளது.  இது JioOS இல் இயங்குகிறது மற்றும் MT8788 ஆக்டா கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது 8 மணிநேர பேட்டரி நீட்டிப்பு திறனை கொண்டுள்ளது. மேலும் இது C/C++, Java, Python மற்றும் Pearl போன்ற கணினி மொழிகளை ஆதரிக்கிறது.

இது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. மெமரியை பொறுத்தவரை 100ஜிபி கிளவுட் ஸ்டோரேஜை வழங்குகிறது. இது JD வெப்கேம் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டிருக்கிறது. இந்த JioBook லேப்டாப் 4G-LTE மற்றும் டூயல்-பேண்ட் வைஃபை திறன்களுடன் 75+ கணினி Shortcut Keys, மல்டி டாஸ்கிங் ஸ்கிரீன்கள் மற்றும் ஜியோ டிவி பயன்பாடுகள் ஆகிய பல வசதிகளை கொண்டுள்ளது.

இதில் USB, HDMI மற்றும் ஆடியோ போர்ட்கள் உள்ளன. JioBook 2023 மேம்படுத்தப்பட்ட பெற்றோர் கட்டுப்பாட்டுடன் கூடிய ஒரு வருட Quick Heal Antivirus பாதுகாப்புடன் வருகிறது. வடிவமைப்பைப் பொறுத்தவரை, ஜியோபுக் ஒரு மேட் பூச்சு, அல்ட்ராஸ்லிம் கட்டமைக்கப்பட்ட மற்றும் குறைந்த எடையுடன் வருகிறது. முன்பு கூறியது போல் இதன் எடை வெறும் 990 கிராம் தான்.

இதன் விலை ரூ.16,499 என அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் லேப்டாப்பிற்கான அனைத்து சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது. ஆனால் சாதாரணமாக மற்ற லேப்டாப்களில் பயன்படுத்தும் விண்டோஸ் போன்ற பிரபலமான OS இயங்குதளத்தில் இல்லாமல் இது JioOSல் இயங்குகிறது. இந்த புதிய இயங்குதளம் எந்தெந்த வகையான அப்ளிகேஷன்களை சப்போர்ட் செய்யும் என்பது குறித்து சரியாக தெரியவில்லை.

Edit by Prasanth.K