தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு! இணையதளத்தில் பார்க்கலாம்!

election
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு
siva| Last Updated: புதன், 20 ஜனவரி 2021 (07:28 IST)
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட வாரியாக அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்கள் இன்று வெளியிட உள்ளார்கள்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது என்பது தெரிந்ததே.

அதில் தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 10 லட்சத்து 44 ஆயிரத்து 358 வாக்காளர்கள் உள்ளனர் என்பதும், அதில் ஆண் வாக்காளர்கள் 3,01,12,370 என்றும், பெண் வாக்காளர்கள் 3,09,25,603 என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது
இந்த நிலையில் தமிழகத்தில் புதிய வாக்காளர் பட்டியல் சேர்க்கை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் செய்ய நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 15ம் தேதி வரை தாலுகா அலுவலகம், மண்டல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை ஏராளமானோர் பயன்படுத்தி கொண்டனர்.

இந்த நிலையில் சென்னையில் சென்னை மாநகராட்சி ஆணையரும், மற்ற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்களும், மாவட்ட வாரியாக இறுதி வாக்காளர் பட்டியலை இன்று வெளியிடவுள்ளனர். இதையடுத்து, பொதுமக்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா? என்பதை elections.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :