திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 16 ஜூலை 2021 (20:12 IST)

இன்று உதயநிதியிடம் நிதி கொடுத்தவர்களின் விபரங்கள்!

இன்று உதயநிதியிடம் நிதி கொடுத்தவர்களின் விபரங்கள் குறித்து அவரே தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அந்த விபரங்கள் இதோ:
 
மாதவரத்தைச் சேர்ந்த KVN traders உரிமையாளர் சகோதரர் நரேன் அவர்கள் கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.10 ஆயிரத்திற்கான காசோலையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொதுநிவாரண நிதிக்கு இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்.
 
கொரோனா தடுப்பு பணிக்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு,   மருத்துவப் பணிகள் (தொழுநோய்) துணை இயக்குநர் அலுவலகத்தில்  உதவியாளராக பணியாற்றும் ஆர்.ஹரி கிருஷ்ணன் அவர்கள் ரூ.3000-த்தை தன்னுடைய குடும்பத்தினருடன் வந்து இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் நன்றி.
 
திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் சகோதரர் திராவிடன் வசந்தகுமார் அவர்கள் கல்வி மற்றும் மருத்துவ சேவை பணிகளுக்காக ரூ.5 ஆயிரத்தை கழக இளைஞரணியின் அறக்கட்டளைக்கு இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் நன்றி.
 
NLC தொழிலாளர் முன்னேற்ற சங்க (தொ.மு.ச) அலுவலக செயலாளர் ஆர்.ஜெரால்டு அவர்கள் கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்