வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 16 ஜூலை 2021 (15:44 IST)

வலிமை படத்தை வாங்கும் உதயநிதி! கல்லா கட்ட செம்ம ப்ளான்!

வலிமை படத்தின் செங்கல்பட்டு ஏரியா திரையரங்க உரிமையை உதயநிதி வாங்க உள்ளாராம்.

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக படத்திற்கான அப்டேட் கேட்டு ரசிகர்கள் காத்திருந்த சூழலில் சமீபத்தில் வலிமை ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

இந்த படத்தில் இன்னும் 10 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளது. இதை முடித்து மற்ற பணிகளை முடித்து விட்டு தீபாவளிப் பண்டிகைக்கு வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. வலிமை திரைப்படத்தின் இந்தி டப்பிங் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. தமிழில் வெளியாகும் அன்றே இந்தியிலும் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் திரையரங்க உரிமையை கைப்பற்ற மிகப்பெரிய அளவில் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் செங்கல்பட்டு ஏரியா உரிமையை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயிண்ட் மூவிஸ் மூலமாக வாங்கி வெளியிடும் முடிவில் உள்ளாராம். போனி கபூர் இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ஆர்ட்டிகிள் 15 படத்தில் நடிப்பதால் எளிதாக அதை வாங்க முடியும் என சொல்லப்படுகிறது.