திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 12 ஜூலை 2021 (20:51 IST)

இன்று உதயநிதி எம்.எல்.ஏவிடம் நிதியளித்தவர்களின் விபரங்கள்

இன்று உதயநிதி எம்.எல்.ஏவிடம் நிதியளித்தவர்களின் விபரங்கள் குறித்து அவரே தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதுகுறித்த விபரங்கள் இதோ
 
நீலகிரி மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் சகோதரர் இமயம் சசிக்குமார்  அவர்கள் கல்வி மற்றும் மருத்துவ சேவை பணிகளுக்காக கழக இளைஞர் அணி அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையை இன்று என்னிடம் வழங்கினார். உடன் மாவட்ட துணை அமைப்பாளர்கள் இருந்தனர். சசிக்குமாருக்கு அன்பும், நன்றியும்
 
சென்னை செண்பகம் பதிப்பகம் சார்பில் அதன் மேலாளர் எஸ்.மணிகண்டன் அவர்கள் ரூ.10,000-த்துக்கான காசோலையை கொரோனா ஒழிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்.
 
ஹாங்காங் YIFC கல்வி கழகம் சார்பில் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் அப்துல் அஜிஸ், ஆலோசகர் மு.இராமநாதன், முன்னாள் மாணவர் சாதிக் ஆகியோர் ரூ.50,000-த்துக்கான வரைவோலையை கொரோனா தடுப்புக்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நிவாரண நிதிக்கு இன்று என்னிடம் வழங்கினர். அவர்களுக்கு என் நன்றி.