வியாழன், 16 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: செவ்வாய், 13 ஜூலை 2021 (10:47 IST)

தொகுதிக்கு லீவ்… ஷூட்டிங்குக்கு அட்டண்டன்ஸ் – உதயநிதி ஸ்டாலின்!

நடிகர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் தனது திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்.

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கிய தடம் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் அவர் மீதான கவனம் மற்ற ஹீரோக்களும் ஏற்பட்டுள்ளது. இதனால் விஜய் போன்ற பெரிய ஹீரோக்களே அவரிடம் கதைக் கேட்டுள்ளனர். ஆனால் உதயநிதி ஸ்டாலினிடம் ஏற்கனவே அட்வான்ஸ் வாங்கிவிட்டதால் மகிழ்திருமேனியால் விஜய் படத்தை இயக்க முடியவில்லை. இந்நிலையில் இப்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து ஒரு படத்தை அவர் இயக்க இருந்தார்.

ஆனால் சட்டசபை தேர்தல் மற்றும் கொரோனா ஊரடங்கால் இந்த படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது. அதையடுத்து இப்போது நிலைமை சரியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சென்னையை அடுத்த திருப்போரூரில் நடந்துவருகிறது. அதில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டுள்ளார்.