1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 11 மே 2020 (08:13 IST)

சென்னையில் கொரோனாவுக்கு மேலும் இருவர் பலி: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் தினமும் 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அதில் பெரும்பாலானோர் சென்னையில் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் தமிழகத்தில் 669 பேர்களும் அதில் சென்னையில் மட்டும் 509 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்றுமுன் வெளிவந்த தகவலின்படி சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இருவர் உயிரிழந்துள்ளனர். சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த 64 வயது பெண் ஒருவரும், கொளத்தூரை சேர்ந்த 67 வயது ஆண் ஒருவரும் இன்று கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
 
இதனையடுத்து கொரோனாவால் சென்னையில் பலி எண்ணிக்கை 30ஆகவும், தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 49ஆகவும் உயர்ந்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களும் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில் இன்று முதல் கிட்டத்தட்ட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு இயல்பு நிலையும் திரும்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது