வியாழன், 11 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 9 நவம்பர் 2021 (07:58 IST)

திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை

திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை
ஒவ்வொரு வருடமும் திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் விழா மிகவும் சிறப்பாக நடைபெறும்
 
இந்த நிலையில் இன்று சூரசம்ஹார விழா நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால் அதே நேரத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சூரசம்காரம் விழாவிற்கு பக்தர்கள் அனுமதி இல்லை என்றும் நேரலையில் தொலைக்காட்சியில் சூரசம்ஹாரம் விழா ஒளிபரப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
திருச்செந்தூரில் சூரசம்காரம் விழா இன்று நடைபெற உள்ளதை அடுத்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட எஸ்பி தலைமையில் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது