செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 18 அக்டோபர் 2021 (12:11 IST)

சபரிமலையில் 21ம் தேதி வரை தரிசனத்திற்கு அனுமதி இல்லை – பக்தர்கள் ஏமாற்றம்!

சபரிமலையில் நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி என கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத மண்டல பூஜைகளுக்காக கோவில் நடை திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த காலக்கட்டத்தில் பக்தர்கல் பலர் மாலையிட்டு சபரிமலை செல்வது வழக்கம். இந்நிலையில் அக்டோபர் 19 முதல் பக்தர்களுக்கு தரிசன அனுமதி என முன்னதாக அறிவித்த சபரிமலை நிர்வாகம் அதற்கான முன்பதிவுகளையும் தொடங்கியது.

இந்நிலையில் கேரளாவில் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சபரிமலையில் நாளை முதல் தரிசனத்திகு அனுமதி என்ற அறிவிப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 21 வரை சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.