1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today tamil nadu corona virus status

4 ஆயிரத்தை விட குறைந்தது கொரோனா: பொதுமக்கள் நிம்மதி

தமிழகம்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 10ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வந்த போதிலும் இன்று 4ஆயிரத்தை விட கொரோனா பாதிப்பு குறைந்தது 
 
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,971 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 16,473 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 742 என்றும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 என்றும் தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
 
கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,24,476 என்றும், இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,10,494 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
 
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?