செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 9 பிப்ரவரி 2022 (20:29 IST)

நகைக்கடன் தள்ளுபடி- தமிழக அரசு புதிய உத்தரவு

இரண்டு நாட்களுக்குள்    நகைக்கடன் தள்ளுபடி பெறத் தகுதியானவர்கள்  பட்டியல் தயார் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒரே ரேஷன் அட்டை எண் மூலமாக ஒன்று அல்லது அதற்கு மேல் வழங்கப்பட்டுள்ள 40 கிராமுக்கு மேலுள்ள நகைக்கடங்கள் குறித்தும் ஒரே ஆதார் கார்டு மூலமாக ஒன்று அல்லது அதற்கு மேல் வழங்கப்பட்ட 40 கிராமுக்கு மேல் உள்ள  நகைக்கடங்கள் குறித்து இறுதிப்பட்டியல் தயார் செய்ய வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தள்ளுபடிக்குத் தகுதியான நபர்கள் மீது சந்தேகம் இருந்தால் அவர்களைத் தகுதியானவர்களின் பட்டியலில் சேர்த்து அதற்கான காரணத்தை குறிப்பிட வேண்டும் எனவும், பிப்ரவரி 10 ஆம் தேதி க்குள் பதிவாளர் அலுவலகத்திற்கு நகைக்கடன் தள்ளுபடி பெறத் தகுதியுள்ள தகுதியவற்றவர்களின் பட்டியலை தயார் செய்து அனுப்பை வைக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.