செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 11 அக்டோபர் 2023 (07:32 IST)

சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நிறைவு.. தாக்கல் ஆகும் முக்கிய சட்ட முன் வடிவு

TN assembly
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நிறைவடையும் நிலையில் வேளாண் மண்டலத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தையும் சேர்க்கும் வகையில், வேளாண் மண்டல திருத்த சட்ட முன்வடிவு  தாக்கல் ஆகிறது என தகவல் வெளியாகிறது.

இந்த சட்ட முன்வடிவை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். மேலும் தமிழ்நாட்டில் ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்துதல் தொடர்பான சட்ட முன்வடிவு இன்று தாக்கல் ஆகிறது  என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்தும் சட்ட முன்வடிவை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தாக்கல் செய்கிறார்

முன்னதாக இந்த கூட்டத்தொடரில் காவிரி நீர் விவகாரம் குறித்து தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி தனி தீர்மானம் இயற்றப்பட்டது. இந்த தனி தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின்  முன்மொழிந்தார்.

மேலும் பல ஆண்டுகளாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க கோரி அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edited by Siva