1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 10 அக்டோபர் 2023 (18:46 IST)

தமிழ்நாடு அரசின் வரி வருவாயும் உயர உதவிட வேண்டுகிறேன்- முதல்வர்

MK Stalin
சிறு வணிகர்கள் பயன்படக்கூடிய வகையில் சமாதான திட்டத்தை இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிமுகம் செய்து வைத்தார்.

இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் சமூக வலைதள பக்கத்தில்,   

‘’அரசுக்கு வணிகர்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை தொடர்பாக 2,11,607 வழக்குகள் நிலுவையில் உள்ளதால் வணிகவரித் துறையின் பணிச்சுமை அதிகரித்திருப்பதோடு வணிகர்களும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இதைக் களைய, தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக சிறுவணிகர்களுக்கு வரி நிலுவைத் தொகையை முழுவதுமாகத் தள்ளுபடி செய்யும் அறிவிப்பைச் சட்டமன்றத்தில் செய்தேன்.

இத்தகைய சிறுவணிகர்கள் தவிர பிற வணிகர்களும் நான்கு வரம்புகளாகப் பிரிக்கப்பட்டு அவர்களுக்குரிய தள்ளுபடிகளை அறிவித்தேன்.

இலட்சக்கணக்கானோர் பயன்பெறும் வகையிலான இந்த முன்னோடி முயற்சியை வணிகப் பெருமக்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு, தங்களின் தொழில்வளத்துடன் தமிழ்நாடு அரசின் வரி வருவாயும் உயர உதவிட வேண்டுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.