1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today Sasikala return to Chennai,

பெங்களூரில் இருந்து கிளம்புகிறார் சசிகலா: வேல் கொடுத்து வரவேற்க ஏற்பாடு!

சசிகலா
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா சமீபத்தில் விடுதலை ஆன நிலையில் அவர் பிப்ரவரி 8ஆம் தேதி சென்னை திரும்புவார் என ஏற்கனவே கூறப்பட்டது.
 
அந்த வகையில் இன்று காலை 7:20 மணிக்கு அவர் பெங்களூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து அவரை தமிழக எல்லையில் வரவேற்க அவரது ஆதரவாளர்களும் அமமுக கட்சியினர்களூம் தயார் நிலையில் உள்ளனர்.
 
சசிகலாவுக்கு வேல் கொடுத்து வரவேற்க அவரது ஆதரவாளர்கள் தமிழக எல்லையில் தயார் நிலையில் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சசிகலாவை தமிழகத்தில் மொத்தம் 57 இடத்தில் வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
 
தமிழக வரும் சசிகலா அடுத்ததாக என்ன அரசியல் முடிவை எடுப்பார் என்று அனைவரும் காத்திருக்கின்றனர். இன்று தமிழகம் வரும் சசிகலா, ஜெயலலிதாவின் நினைவகம் மூடப்பட்டிருப்பதால் அவர் ராமாவரம் தோட்டத்திற்கு சென்று எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து அதன் பின்னர் தனது இல்லத்துக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த கூடாது: காவல் துணை கண்காணிப்பாளர்