புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 7 பிப்ரவரி 2021 (20:30 IST)

இளவரசி, சுதாகரன் சொத்துக்கள் பறிமுதல்: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த 27ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலையாகி நாளை சென்னை வரவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன மேலும் சசிகலாவுடன் சிறையிலிருந்த இளவரசியும் சமீபத்தில் விடுதலை ஆனபடியால் அவரும் சசிகலாவுடன் இணைந்து சென்னை வருவார் என்று கூறப்படுகிறது
 
இந்த நிலையில் சசிகலா மற்றும் இளவரசி நாளை சென்னை வர உள்ள நிலையில் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய இருவருக்கும் சொந்தமான 6 சொத்துக்களை பறிமுதல் செய்வதாக தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
2017 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இத்தனை ஆண்டு காலம் அமைதியாக இருந்த தமிழக அரசு சசிகலா வரும் நாளில் இளவரசியின் சொத்துக்களை பறிமுதல் செய்வதாக அறிவிப்பு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது