தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு நிலவரம்
தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்புகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 591 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35,63,913 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 696 என்றும் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 35,20,038 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 0 என்றும் தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 88 ( நேற்று 90 ) ஆக குறைந்துள்ள்து.
இன்று கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5842 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.