திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 20 ஆகஸ்ட் 2022 (14:34 IST)

இன்று முதல் 22 ஆம் தேதி வரை இடியுடன் மழை!

தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 22 ஆம் தேதி வரை இடியுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு.


தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தினந்தோறும் மழை குறித்த தகவல்களை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து வரும் நிலையில் இன்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 22 ஆம் தேதி வரை இடியுடன் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

மேலும் ஆகஸ்ட் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு சில பகுதிகளில் மாலை அல்லது இரவில் மலை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.