வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (19:19 IST)

தமிழக மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையால் கைது

தமிழக மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
தமிழகம் நாகபட்டனத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று  மீன் பிடிக்கச் சென்றபோது,  தமிழக எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி  9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
கைது செய்யப்பட்டுள்ள 9 தமிழக மீனவர்களும் இலங்கை திரிகோணமலை கடற்படை முகாமிற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.  இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஏற்கனவே, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, சில மாதங்களுக்கு முன் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு, தமிழக அரசின் அழுத்தம் காரணமாக விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.