வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 3 மே 2023 (07:41 IST)

9 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை.. வானிலை ஆய்வு மையம்..!

இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
நாளை முதல் அக்னி நட்சத்திரம் தொடங்க இருக்கும் நிலையில் வெயில் கொளுத்தும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் அவ்வப்போது மழை பெய்து குளிர்வித்து வருகிறது. 
 
இந்த நிலையில் இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை திருநெல்வேலி கன்னியாகுமரி தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
அக்னி நட்சத்திரம் தொடங்க இருக்கும் நிலையில் மழை பெய்யும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Siva