1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today pudhucherry budget session in assembly

இன்று புதுச்சேரி பட்ஜெட் கூட்டம்: துணைநிலை ஆளுநர் தமிழிசை உரை!

pudhucherry
இன்று புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டம் நடைபெற உள்ளதை அடுத்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் உரையாற்றி கூட்டத்தை தொடங்கி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இன்று புதுச்சேரி சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. புதுச்சேரியில் 2022 - 23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குவதால் சட்டமன்றத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
முன்னதாக புதுவை முதல்வர் ரங்கசாமி சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார் என்பதும், முதல்வர் பதவி ஏற்ற பின்னர் பிரதமர் மோடியை முதல் முதலாக சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
பிரதமரை சந்தித்து வந்த பின்னர புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க இருப்பதை அறிந்து மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்த திட்டங்கள் பல அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
ஆடி பௌர்ணமி; திருவண்ணாமலையில் நாளை கிரிவலம்! – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!