செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 5 மே 2022 (07:32 IST)

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்: மாணவர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து!

exam
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இன்று தொடங்குவதை அடுத்து மாணவர்கள் பதட்டமின்றி தேர்வுகளை எழுத வேண்டுமென அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர் 
 
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுத்தேர்வு நடத்தப்படாத நிலையில் இந்த ஆண்டு மீண்டும் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது 
 
கடந்த சில நாட்களாக பொதுத் தேர்வுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிக்கல்வித்துறை செய்து வந்த நிலையில் இன்று எந்தவித பிரச்சனையும் இல்லாமல் தேர்வை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது 
 
இந்த நிலையில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இன்று தேர்வுகளை எழுத வேண்டும் என்றும் பதட்டமின்றி எழுத வேண்டும் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர் 
 
இன்று நடைபெறும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை 8 லட்சத்து 37 ஆயிரம் பேர் எழுத உள்ளனர் என்றும் இதற்கான வழி காட்டு நெறிமுறைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டு உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது