திங்கள், 3 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 3 மே 2022 (19:09 IST)

10,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: எச்சரிக்கை விடுத்த தேர்வு துறை இயக்கம் !

நாளை மறு நாள் 10,11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடக்கவுள்ள நிலையில் அரசு தேர்வுகள் இயக்கம் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக கொரொனா காரணமாக பொதுத்தேர்வுகள் நடக்காமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெறுகிறது.

எனவே தேர்வு அறைக்கு ஆசிரியர்களோ, தேர்வர்களோ செல்போன் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறினால் கடும் ந்டவடிக்கை எடுக்கப்படும் எனவும், 10,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் காப்பி அடித்தால் ஓராண்டுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்படும் எனவும், பொதுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தால் வாழ் நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கபப்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.