1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 27 மார்ச் 2022 (07:15 IST)

பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: 6 நாட்களில் ரூ.3.50 உயர்ந்ததால் அதிர்ச்சி

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இன்று பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 47 காசுகள் உயர்ந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 104.90 என விற்பனையாகிறது.
 
 இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 53 காசுகள் உயர்ந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 95.00 எனவும் விற்பனையாகி வருகிறது 
 
கடந்த ஆறு நாட்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 6.50 அதிகரித்துள்ளதால் மக்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது