1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 26 மார்ச் 2022 (08:40 IST)

விலை உயர்வுக்கு தேர்தல் காரணமா? உக்ரைன் மீது பழி போட்ட நிர்மலா!

இந்தியாவில் எரிபொருள் விலையேற்றத்திற்கும், தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 

 
கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் - டீசல் விலை உயராமல் இருந்த நிலையில் திடீரென சமீபத்தில் பெட்ரோல் டீசல் விலை உயரத் தொடங்கியது என்பதை பார்த்தோம். பெட்ரோல், டீசல், கேஸ் ஆகிய மூன்றும் ஒரே நாளில் உயர ஆரம்பித்தது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
உத்தரபிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில தேர்தல் முடிந்ததும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் என எதிர்ப்பார்கப்பட்டது. அதன் படியே விலையும் உயர்ந்தது. ஆனால், இந்தியாவில் எரிபொருள் விலையேற்றத்திற்கும், தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். உக்ரைன் போர் சூழலே பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றத்திற்கு காரணம் என விளக்கமளித்துள்ளார்.
 
இந்நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை 76 காசுகள் உயர்ந்து உள்ளதை அடுத்து 104.43 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது. அதேபோல் சென்னையில் இன்று டீசல் விலையும் 76 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து ஒரு லிட்டர் டீசல் விலை 94.47 என்ற விலையில் விற்பனை ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.