1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 26 மார்ச் 2022 (16:22 IST)

பாராசிடாமல் உள்ளிட்ட 800 மருந்துகளின் விலை உயரப் போகிறது… அடுத்த அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலை உயர உள்ளதாக சொல்லபடுகிறது.

இந்தியாவில் மருந்து பொருட்கள் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் பட்டியலிடப்படாத மருந்துகள் என இருவகைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இப்போது பட்டியலிடப்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலையை சுமார் 10 சதவீதம் வரை உயர்த்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதனால் பாராசிடாமல் உள்ளிட்ட அத்கம் பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலை ஏப்ரல் 1 ஆம் தேதிக்குப் பிறகு உயர வாய்ப்புள்ளதாம்.