சைக்கிள் ஓட்டுங்கப்பா..! பெட்ரோல் விலை உயர்வை நக்கல் செய்யும் சன்னி லியோன்!
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ள நிலையில் நடிகை சன்னி லியோன் ட்விட்டரில் இட்டுள்ள பதிவு வைரலாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் தற்போது பெட்ரோல், டீசல் விலை பல இடங்களில் ரூ.100ஐ தாண்டியும் விற்பனையாகி வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பல இடங்களிலும் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பெட்ரோல் விலை உயர்வு குறித்து ட்விட்டரில் சூசகமாக பதிவிட்டுள்ள நடிகை சன்னி லியோன் “இது ரூ.100 ஐ தாண்டிவிட்டால் உங்கள் உடல்நலனை காத்து கொள்வது அவசியம். சைக்கிள் ஓட்டுவது நலம்” என்று பதிவிட்டுள்ளார், தற்போது பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.