1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 6 ஜூலை 2021 (10:49 IST)

என்ன இப்படி கிளம்பிட்டாய்ங்க..! அதிகரிக்கும் பெட்ரோல் திருட்டு! – சென்னையில் அதிர்ச்சி!

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில் வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருடப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து விலை உயர்வை சந்தித்து வரும் நிலையில் தற்போதைய பெட்ரோல் விலை ரூ.100 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவின் பல பகுதிகளில் டீசல் விலையுமே ரூ.100 ஐ தாண்டியுள்ளது. தலைநகர் சென்னையிலும் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டியுள்ளது.

இந்நிலையில் சமீப காலமாக பெட்ரோல் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பலர் இரவு நேரங்களில் வளாகங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றிலிருந்து பெட்ரோல் திருடுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை அம்பத்தூரில் குடியிருப்பு வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் நுழைந்து பைக்கிலிருந்து பெட்ரோல் திருடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. பெட்ரோல் விலை உயர்வால் திருட்டு சம்பவம் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.