1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 8 ஜூலை 2021 (06:59 IST)

நேற்றை போலவே இன்றும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் பெட்ரோல் விலை நேற்று 31 காசுகள் உயர்ந்ததை அடுத்து இன்றும் லிட்டருக்கு 31 உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால் பெட்ரோல் விலை சென்னையில் ரூ.102ஐ நெருங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் டீசல் விலையும் நேற்று போல் இன்றும் 9 காசுகள் உயர்ந்து உள்ளன என்பதால் ரூ95ஐ டீசல் விலை நெருங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சென்னையில் இன்று பெட்ரோல் விலை 31 காசுகள் உயர்ந்ததால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.37 என்றும், டீசல் விலை 9 காசுகள் உயர்ந்ததால் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.15 என்றும் விற்பனையாகிறது.
 
இதே ரீதியில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே சென்றால் சென்னையில் பெட்ரோல் விலை ரூ.110ம், டீசல் விலை ரூ.100ஐயும் இந்த மாதத்திற்குள் நெருங்கி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது