வெள்ளி, 7 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 7 மார்ச் 2025 (12:00 IST)

அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது.. திருத்தப்பட்டது நடத்தை விதிகள்..!

assembly
அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யக்கூடாது என்பதுடன், சில நடத்தை விதிகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அரசு ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
தமிழக அரசின் ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட நடத்தை விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது, அரசியல் கட்சி அமைப்பில் உறுப்பினராக கூடாது, அனுமதி இன்றி வேலைக்கு செல்லாமல் இருப்பது போராட்டமாக கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல், அனுமதி இன்றி அரசு அலுவலக வளாகத்தில் ஊர்வலம், கூட்டம் நடத்தக்கூடாது என்றும் வேலை நிறுத்தத்தை தூண்டும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. 
 
மேலும், எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ஆதரவாக அரசு ஊழியர்கள் பிரச்சாரம் செய்யக்கூடாது என்றும், சமூகத்தில் ஒற்றுமையை சீர்குலைக்கும் எந்த ஒரு செயலிலும் ஈடுபடக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதனால், அரசு ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran