புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 5 பிப்ரவரி 2022 (13:35 IST)

நீட் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்படும்!

தமிழக சட்டப்பேரவையில் நீட் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல். 

 
நீட் விலக்கு மசோதா தொடர்பாக சட்டமன்ற அனைத்துக் கட்சியினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.  பாஜக, அதிமுக, புரட்சி பாரதம் புறக்கணித்த நிலத்தில் திமுக, காங்கிரஸ் உள்பட 10 கட்சிகள் பங்கேற்றன. மேலும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், பாமக, விசிக, மதிமுக, மமக, தவாக, கொமதேக நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர்.
 
இந்நிலையில் அனைத்துக்கட்சி கூட்டத்தில், நீட் விலக்கு மசோதா தொடர்பாக சட்டமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற சிறப்பு கூட்டத்தொடருக்கான தேதியை விரைவில் சபாநாயகர் அறிவிப்பார் என தெரிகிறது. வரும் 9 ஆம் தேதி கூட்டத்தை கூட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
 
இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியபோது அவர் குறிப்பிட்டிருந்த சில காரணங்களை பேரவையின் சிறப்பு அமர்வு கூடி விவாதிக்கும் என்றும் அதன் அடிப்படையில் மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க ஆளுநர் கேட்டுக் கொள்ளப்படுவார்.