புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 20 ஜனவரி 2020 (07:12 IST)

தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது: அதிரடி அறிவிப்புகள் இருக்குமா?

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை நடைபெறவுள்ள நிலையில் இந்த கூட்டத்தில் அதிரடி முடிவுகள் எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
 
வரும் 2020-21-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் விரைவில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் தற்போது பட்ஜெட் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் பட்ஜெட் தயாரிப்புப் பணியில் நிதியமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில், பட்ஜெட் குறித்து அதில் சேர்க்கப்பட வேண்டிய முக்கிய திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கவே இன்றைய அமைச்சரவை கூட்டம் கூட்டப்படுவதாகவும் இந்த கூட்டத்தில் பட்ஜெட் குறித்து அமைச்சர்களிடம் முதல்வர் ஆலோசிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
மேலும் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் சில முக்கிய தொழில் திட்டங்களுக்கான அனுமதிகள் அதற்கான நிலங்கள், மானியங்கள் அளிப்பதற்கான முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அதேபோல் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி குறித்தும் இந்த தேர்தலை சந்திக்க அமைக்கப்படும் வியூகங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன