1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 4 ஆகஸ்ட் 2021 (13:24 IST)

ஆகஸ்ட் 13ஆம் தேதி தமிழக பட்ஜெட்: பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்

தமிழக பட்ஜெட் ஆகஸ்ட் 13ஆம் தேதி தாக்கல் செய்யப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது 
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் கூடியது என்பது ஏற்கனவே தெரிந்ததே. இந்த அமைச்சரவை கூட்டத்தில் தமிழக பட்ஜெட் ஆகஸ்ட் 13-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு வருவதாகவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
தமிழக வரலாற்றில் முதல் முறையாக விவசாய பட்ஜெட் தனியாக அன்றைய தினமே தாக்கல் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவியேற்ற பின் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் வெளிவரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்