புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 1 ஜூன் 2023 (08:00 IST)

இன்று உலக பால்தினம்.. சென்னையில் 3து நாளாக ஆவின் பால் விநியோகம் பாதிப்பு..!

milk
இன்று உலக பால் தின உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னையில் மூன்றாவது நாளாக ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ஆம் தேதி உலக பால் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் பாலின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை சார்பில் ஜூன் ஒன்றாம் தேதி உலக பால் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் உலக பால் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னையில் மூன்றாவது நாளாக ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
சென்னை சோழிங்கநல்லூர் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் உள்ள ஆவின் பால் பண்ணைகளில் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இன்று காலை ஆறு மணி நிலவரப்படி பால் பாக்கெட்டுகள் ஏற்றப்படாமல் 15க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
பால் வரத்து குறைவு, ஒப்பந்த தொழிலாளர்கள் வருகை குறைவு உள்ளிட்ட காரணங்களால் பால் வினியோகம் பாதிப்பு என கூறப்படுகிறது.
 
Edited by Siva