1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 26 மே 2023 (12:03 IST)

உள்ளுர் டென்னிஸ் பால் கிரிக்கெட்டில் தடை செய்யப்பட்ட ஆகாஷ் மத்வால்.. என்ன காரணம்?

சில தினங்களுக்கு முன்னர் நடந்த ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியை வீழ்த்தி மும்பை அணி குவாலிஃபயர் 2 முன்னேறியது. அந்த போட்டியில் மும்பை அணியின் ஆகாஷ் மத்வால் மொத்தம் 3.3 ஓவர் மட்டுமே வீசி 5 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவ்வளவு குறைவான ஓவர்களில் குறைவான ரன்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனையை படைத்துள்ளார் ஆகாஷ் மத்வால்.

அந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற மத்வால் பொறியாளராக இருந்து கிரிக்கெட் விளையாட்டுக்குள் நுழைந்தவர். மேலும் இதுபற்றி பேசிய அவர் “இஞ்சினியராக இருந்து கிரிக்கெட்டுக்குள் வந்தேன். இஞ்சினியர்கள் எதையும் எளிதாக புரிந்துகொள்வார்கள் என்பதால் எனக்கு எளிமையாக இருந்தது” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஆகாஷ் மத்வால் பற்றி பேசியுள்ள அவரின் உள்ளூர் நண்பர் ஒருவர் “ஆகாஷ் மத்வால் இஞ்சினியர் முடித்து வேலைக்கு போய் கொண்டிருந்த உள்ளூர் டென்னிஸ் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்தார். ஆனால் அவரின் அசுர வேகப் பந்துவீச்சைப் பார்த்து அனைவரும் பயந்தனர். இதனால் அந்த போட்டிகளில் அவரை தடை செய்யும் அளவுக்குக் கூட சென்றன. எந்த அணியும் அவரை விளையாட அனுமதிக்கவில்லை” என்ற தகவலை வெளியிட்டுள்ளார்.