1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated: வியாழன், 25 மே 2023 (16:40 IST)

அதிக விலைக்கு பால் கொள்முதல் என்ற தகவல் பொய்யானது: அமுல் விளக்கம்..!

ஆவின் நிறுவனத்தை விட அதிக விலைக்கு அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதாக குற்றச்சாட்டு இருந்த நிலையில் இது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினார். 
 
மேலும் இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் தங்களது கருத்துக்களை ட்விட்டரில் தெரிவித்தனர் என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் அமுல் நிறுவனம் இந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ளது. 
 
அந்த விளக்கத்தில் ஆவின் நிறுவனத்தை விட அதிக விலைக்கு அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதாக கூறும் தகவல் பொய்யானது என்று தெரிவித்துள்ளது. 
 
ஆவின் நிறுவனம் என்ன விலையை பாலுக்கு நிர்ணயம் செய்துள்ளதோ அதே விலைக்கு தான் நாங்களும் கொள்முதல் செய்கிறோம் என்றும் விவசாயிகள் பாதிப்பை தடுக்கவே அமுல் செயல்படும் என்றும் ஆவின் நிறுவனத்துக்கு எதிராக எப்போதும் செயல்படாது என்றும் அமுல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
 
Edited by Siva