எஸ்ஐஆர் விண்ணப்பம் சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள்.. மீண்டும் தேதி நீட்டிக்கப்படுமா?
தமிழ்நாடு உட்பட சில மாநிலங்களில் வாக்காளர் திருத்த நடவடிக்கை நடைபெற்று வரும் நிலையில், இதற்காக வழங்கப்பட்ட படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாக இருக்கும் நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர். படிவங்களை இன்று மாலைக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
ஏற்கனவே டிசம்பர் 11-ஆம் தேதி வரை மட்டுமே இந்த கால அவகாசம் இருந்த நிலையில், 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தேர்தல் அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் ஒருமுறை கால நீட்டிப்பு செய்யப்படுமா அல்லது இன்று மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Edited by Siva