1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today heavy rain in seventeen districts

இன்னும் 2 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

வானிலை
தமிழகத்தில் உள்ள 17 மாவட்டங்களில் இன்னும் இரண்டு மணி நேரத்தில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்  ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தி வரும் நிலையில் இந்த மழை வரும் என்று அறிவிப்பு மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் அதிக வெப்பம் வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



Edited by Siva
அடுத்த கட்டுரையில்
மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு